Idlytheevee kavutaaVadai - இட்லிவடை: எடியூரப்பாவின் நம்பிக்கை#links
தேவேகவுடா- ஆட்சியைக்கவுடா!
புத்திசாலி யாரோ தெரியாது மக்கள்தான் சரியான மக்குகள். தென்னகத்தில் முதல் முதலாக பாஜக ஆட்சி என்று காலரைத் க்கிவிட்டுக்கொண்ட நேரம்கூட ஆட்சியில் இருக்க முடியவில்லை. இப்போது இந்தியா அரசியல் வரலாற்றில் முதல் முதலாக ஏழே நாட்களில் கவிழ்ந்த ஆட்சி என்று பெருமைப்படலாம்- முடிந்தால் கின்னஸ் ரிகார்ட் கூடப் படைக்கலாம்.
இந்த ஒருவார ஆட்சிக்கு எத்தனை அமர்க்களம்?கவர்னர் முன் அப்புறம் ஜனாதிபதி முன் என்று எம். எல். ஏக்களை கொண்டு அணிவகுததென்ன? மத்திய அரசின் மீது பாய்ந்த பாய்ச்சலென்ன- ஆடிய ஆட்டம்தான் என்ன? இத்தனைக்கும் பின்னணியில் பாஜகக்குப்பினால் கத்தியை வைத்துக்கொண்டு கவுடா மனதுக்குள் சிரித்துக்கொண்டிருந்திருக்கிறார்.
இப்போதைக்கு அவரது லட்சியம் நிறைவேறிவிட்டது- ஜனதாதலத்திற்குள்ளேயே ஒரு பிரிவு எங்கே காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து விடுவார்களோ தன் மகன் குமாரசாமிக்கு பதவி இல்லாமல் போய்விடுமோ என்று பாஜக விற்கு ஆசைவார்த்தை காட்டினார். விவஸ்தை கெட்ட பாஜ கவும் வாலைச் சுருட்டிக்கொண்டு அத்தனை அவமானங்களுக்குப் பின்னரும் கவுடாவின் பின்னால் ஓடியது. இன்று வைத்து விட்டார்கள் சரியான ஆப்பு! இப்போது புலம்பி என்ன பயன்? கண்கெட்டபின் சூரிய நமஸ்காரமா? அடுத்தபடியாக காங்கிரசிடம் பேசப்போகிறது இந்த ஜனதாதளம்! சிலருக்கு சொன்னாலும் தெரியாது பட்டாலும் புரியாது! அந்த ரகத்தைச் சேர்ந்த காங்கிரசும் கவுடாவிற்குப் பின்னால் ஓடக்கூடும்/
இந்த அரசியலில் என்ன வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! இப்போதுமறு தேர்தல் வந்தால் ஜனதாதளம் (S- சுயநல ம்) ஒரு சீட்டைக்கூடப்பெறாது
டி.எஸ்.பதமநாபன்
Monday, November 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment