இதோ அதோன்னு தேர்தலுக்குத் தேதியும் சொல்லியாச்சு- அப்புறம் என்ன? இன்னும் மூனு மாசத்துக்குத் திருவிழாக்கள்தான், கொண்டாட்டம்தான்!் இலவசங்கள் வீடுதேடி வரும்- இதுவரை பார்க்கமுடியாத உங்க்ள் தொகுதி ஆட்சியாளர்களின் தரிசனம்கிடைக்கும்- உங்க்ளுக்கு சேவை செய்வதற்காகவே பிறந்ததுபோலக் கூழை கும்பிடு போட்டு வலம் வருவார்கள். வழக்கம்போல நாமும் அவர்க்ள் போடும் பிச்சைக்கு மயங்கி அவர்களது வாக்குறுதியை நம்பி ஏமாந்து இன்னும் ஐந்து வருஷங்க்ளுக்கு'ஞே 'என்று விழித்துக்கொண்டிருப்போம்-
இந்த மாதிரியெல்லாம் இந்த முறை நடந்து விடக்கூடாது- எப்போதும் ஏமாந்து கொண்டே இருக்கக்கூடாது- சந்தர்ப்ப அரசியல்வாதிக்ளுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்- இனியும் ஜாதி அரசியலும் தாதாக்களின் வலமும் செல்லாது என்று அவர்களுக்குக் காட்டவேண்டும் இந்த விழிப்புணர்வை நாம் நமக்குத்தெரிந்த நாலுபேருக்கு ஏர்படுத்தவேண்டும்- இந்தநாலு நாற்பது, நானூறு நாலாயிரம் என்று ஒரு புதிய சமுதாயம் உருவாக வேண்டும்- அந்த இலக்கை நோக்கி நாம் அனைவரும் நடைபோடுவோம்- வேட்பாளர்கள் தலைவர்களது்
ஏமாற்றுவேலையைத் துகிலுரிப்போம்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா இந்த மக்கள் போராட்டத்தை முன்னின்று நடத்துகிறது- அந்த போராட்டத்திற்குத் தோள் கொடுப்போம்- அந்தப் பத்திரிகையில் ஆங்கிலத்தில் நாம் செய்யவெண்டியது செய்யக்கூடாதது பற்றிி எழுதியிருந்தார்க்ள்- ஒவ்வொருவரும் மனதில் கொள்ளவெண்டிய வைர வரிகள் அவை. அதன் தமிழாக்கத்தை இங்கே தரலாம் என்றுரு நினைக்கிறேன்
நான் சபதம் செய்கிறேன்........
---------------------------------
நான் சபதம் செய்கிறேன் இந்தமுறை நிமிர்ந்து நிற்பேனென்று
நான் நம்புபவைகளுக்காக அல்ல, நான் நம்பாதவைகளுக்காக
இந்தமுறை நான் வாக்களிப்பேன், ஆதரவாக அல்ல, எதிர்த்து
என்னுடைய இயலாமையை எதிர்த்து
என்னுடைய சோம்பேறித்தனத்தை எதிர்த்து
'எப்படியோ போகட்டும் என்ற' இரண்டு வார்த்தைகளை எதிர்த்து
க்யூ வரிசையில் குறுக்கே பாய்வதை எதிர்த்து
தேர்வுகளில் ஏமாற்றுவதை எதிர்த்து
அலுவலகங்களில் லஞ்சத்தை எதிர்த்து
உதவாக்கரை விசாரணைக் ்குழுக்களை எதிர்த்து
சக்தி வாய்ந்த ஓட்டுவங்கிக்ளை எதுஇர்த்து
அரசியலில் மதங்க்ள் கலப்பதை எதிர்த்து
மதங்களில் அரசியல் கலப்பதை எதிர்த்து
சட்டவிரோதமாகக் கட்டப்படும்கட்டிடங்க்ளை எதிர்ட்து
சட்டத்தின் ஓட்டைகளை எதிர்த்து
நல்லதுநடக்கும் என்று நம்பாதவர்க்ளை எதிர்த்து
ஒன்றுமே மாறாது என்று எண்ணும் அவநம்பிக்கைக்ளை எதிர்த்து
என்னுடை ஒரு வாக்கு என்ன செய்துவிடும்
என்ற என்னத்தை எதிர்த்து
ஓட்டுப்பொட்டமலிருக்கக் காரணங்க்ளைத் தேடுவதை எதிர்த்து
நான் இதை பயமோ வெட்கமோ இல்லாமல் செய்வேன்
இன்றுநம் நாட்டின் செழிப்பை அழிக்கும் இவை எல்லாவற்ரிற்கும்
எதிராக வாக்களிப்பதன்மூலம்தான்
நம்முடைய குழந்தைகளின் நாளைய எதிர்காலம் நலமாக இருக்கும்
போராட்டம் தொடரும்
Tuesday, March 3, 2009
Subscribe to:
Comments (Atom)