Monday, July 30, 2007

பொதிகையில் கேட்டது-31/7

இறையடி முகமது நபி இரவு தொழுகையில் ஈடுபட்டிருந்தார்- தொழுகைக்குச் சென்ற அவர் இடைவிடாமல் தொடர்ந்து இறைவழிபாட்டில் இருந்தார். கால்கள் வீங்கத் தொடங்கியும் அவர் தொழுகையை நிறுத்தவில்லை அவரது மனைவி ஆயிஷாஅவரிடம், ' நீங்கள் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்- உங்களுக்கு எப்போது இறையருள் இருக்கிறது நிச்சயம் உங்Kஅளுக்கு சொர்க்க வாழ்வுதான் கிடைக்கப்போகிறது- இருந்தும் ஏன் இப்படி தொடர்ந்து தொழுகை செய்கிறீர்கள் எனக் கேட்டார்- அதற்கு அவர் எனக்கு இத்தனைஅருள் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டாமா அ தற்காகத்தான் என்று சொன்னார்,
நம்மில் பலர் நமக்கு பிறரைப்போல சொத்து இல்லையே, உடல் நலம் இல்லையே கார் இல்லையே என்று இறைவனிடம் குறைப்பட்டுக் கொள்கிறோம்- ஒரு வீடு நன்றாக இருந்தால் அதை கட்டியவர் யார் என்கிறோம் - ஒரு ஓவியம் நன்றாக இருந்தால் அதை வரைந்தவர் யார் என்று பாராட்டுகிறோம் ஒரு அழுக்கான கைக்குட்டைகீழே விழுந்தால் கூட அதை யாராவது எடுத்துக் கொடுத்தால் அதற்கு நன்றி சொல்கிறோம்- ஆனால் நம்மைப்படைத்த இறைவனுக்கு மட்டும் அவர் நமக்கு 'இதைக் கொடுக்கவில்லை அதைக் கொடுக்கவில்லை' என்று குறைப்படுகிறோமே தவிர நன்றி செலுத்துவதில்லை - பொதிகை தொலைக்காட்சியில் கேட்டது

ஜோசப்செல்லப்பா ஒரு பொருளாதார நிபுணர்- அவர் பொருளாதாரமும் இந்திய வறுமையும் என்ற ஒரு நூல் எழுதினார்- அதைப் படித்த அவரது நண்பர் அவரிடம் 'இந்த நூலை காந்திஜியிடம் தரலாமே அதற்கு காந்தியைச் சந்திக்கலாம் என்று கூறினார். லண்டனிலிருந்த ஜோசப்செல்லப்பா வும் காந்திஜிக்குக் கடிதம் எழுதினார். காந்திஜி 'பம்பாயில் சந்திக்கலாம்' எனக்கூற அவர் பம்பாய் சென்றார். ஆனால் காந்தியின் செயலர் காந்தி ஒரு கூட்டத்தில் இருப்பதால் அவரைச் சந்திக்க முடியாது - பிறகு சந்திக்கலாம் என்றார். பின்னர் அஹமதாபதில் சபர்மதி ஆசிரமத்தில் ஒரு நாள் காலை 11 மணிக்கு சந்திக்க ஏற்பாடாயிற்று- பத்தே முக்கால் மணிக்கே ஆசிரமத்திற்குச் சென்ற செல்லப்பா அங்கு ஒருவர் நூல் நூற்றுக் கொண்டிருப்பதைக் கண்டார்- அவரிடம் 'காந்தியைச் சந்திக்கவேண்டும்' என்றதும் அவர் ,? நீங்கள் செல்லப்பாவா? நான்தான் காந்தி என்றார் . இதைக்கேட்டதும் அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது
காந்தி தனது அருகிலிருந்தவரிடம் விருந்தாளிக்குஅமரநாற்காலிபோடச்சொன்னார்.
பிறகு செல்லப்பா

எழுதியுள்ள புத்தகம் சம்பந்தமாக குஜராத் சர்வகலாசாலையின் துணைவேந்தரைச் சந்திக்கச் சொன்னார்- அவரை எனக்கு அறிமுகம் கிடையாதே என செல்லப்பா சொல்ல, இதோ இப்போது நாற்காலியைக் கொண்டுபோட்டாரே அவர்தான் துணைவேந்தர் என்றார்,
இதைக்கேட்டு செல்லப்பா அதிர்ந்தார்அன்றுமுதல் காந்தியுடன் பணிபுரியும்தொண்டனாகவே மாறிவிட்டார்-பொதிகையில் கேட்டது